குளிர்கால பிரச்சனைகளிலிருந்து உதடுகளை பராமரிக்க, நாம் சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.

குளிர் காலம் தொடங்கியதில் இருந்து பல உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக உதடுகள் குளிர் காலத்தில், ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாமல் உடனே வறண்டு போகும் தன்மை கொண்டது. இதனால் சிலருக்கு, உதடுகளை சுற்றி புண்கள் தோன்றும் மற்றும் கண் இமைகளும் மிக சோர்வாக மாறி விடும். இது போன்று பிரச்சனைகள் இருந்தால் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

இதை தடுக்க நாம் சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.

 உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதபோது உதடுகள் வறண்டு போகும். இதனை தவிர்ப்பதற்கு சிலர் வேதிப்பொருட்கள் கலந்த லிப் பாமை பயன்படுத்துவதுண்டு. இது தற்காலிக ஈரப்பதத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், அதனை பயன்படுத்தாத நேரங்களில் அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்தும்.

குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

மேலும் உதடுகள் வறட்சியடைவதை தவிர்க்க, வைட்டமின் C நிறைந்த உணவுப் பொருட்களை முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் C நிறைந்த பிராக்கோலி, வெள்ளரி, கோதுமை, கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பசும்பால், கேரட், முட்டை மற்றும் மாம்பழம் முதலிய உணவுப் பொருட்கள், உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கும்.

தேங்காய் எண்ணெய்:

உதடு வெடிப்பு மற்றும் புண்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாக செயல்படும். இயற்கையிலேயே தேங்காய் எண்ணெய், புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதை உதடுகளில் தடவி, மசாஜ் செய்து வரும்போது வெடிப்பு மற்றும் புண்கள் மறையும்.

தோல் உரிகின்ற உதடுகள்:

சர்க்கரை அல்லது வெதுவெதுப்பான துணியை கொண்டு உதடுகளை மெதுவாக தொட்டு தொட்டு வைக்கவும். சூடு அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

லிப் பேக்:

சுத்தமான பருத்தித் துணியை பசும்பாலில் நனைத்து உதடுகளை சுத்தப்படுத்தவும். பின்பு தேன், சர்க்கரை, பாதாம் எண்ணெய் 1 டீஸ்புன் கலந்து, காலையிலும், இரவு தூங்கும் முன்பும் உதடுகளில் தடவி வரவும். இது உதடுகளை வெடிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, சிவப்பாகவும் மாற்றும்.



பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் வாஸ்லின்:

உதடுகள் மற்றும் கண் இமைகள் வறண்டு போகாமல் இருக்க அவற்றில் வாஸ்லின் தடவுங்கள். இது சிறந்த முறையில் ஈரப்பதத்தை தர உதவும். பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் வாஸ்லின் ஆகிய மூலப்பொருட்கள் உதட்டை மென்மையாக வைக்கும். மேலும் வறண்ட தோல் பகுதியை நீக்கி விடும்.

 மேலே குறிப்பிட்டவை உதடுகளுக்கு, எந்த தீங்கும் விளைவிக்காது. மேலும், உதடுகளை ஈரப்பதத்துடனும், ஆரோக்கியத்துடனும் பாதுகாக்க உதவும்.