shops near schools will be closed

வியாபார நோக்கத்தோடு, பல பெட்டிக்கடைகள் முதல் பேக்கரி போன்ற சற்று பெரிய கடைகள் வரை அனைத்து கடைகளிலும் நொறுக்கு தீனி விற்பது அதிகரித்துள்ளது .கூடவே குளிர்பானங்கள் மட்டுமின்றி ஜங் புட் எனப்படும் பாக்கெட் தின்பண்டங்கள் வரை அதிகம் விற்கப்பட்டு வருகிறது .

அதும் கூட பள்ளிகளின் அருகில் அதிக அளவில் இது போன்ற குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தின்பண்டன்களால் பள்ளி மாணவர்கள் எளிதில் பருமன் அடைவதும்,அதிகம் சர்க்கரை நிறைந்த குளீர் பானங்களை தொடர்ந்து அருந்தி வருவதால் அவர்களுக்கு எளிதில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்குவதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனால் பாதுகாப்பான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளும் பொருட்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவன்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார் .

MCDonald, merry brown, KFC, Pepsi, coca cola உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இது போன்ற ஜங் புட் விற்பனையில் இந்தியாவில் அதிகம் லாபம் கண்டு வருகிறது . ஆனால் நம் குழந்தைகளின் உடல் நலனோ எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும் .

எனவே குழைந்தைகளின் நலனை பாதிக்கும் வகையில், பள்ளிக்கு அருகில் இந்த தின்பண்டங்கள் அதிகம் விற்கும் கடைகளுக்கு தடை விதிக்க உள்ளது மத்திய அரசு .