ரயில் பயணிகளே ஜாக்கிரதை; இப்படியும் உணவு கொடுத்து ஏமாத்துவாங்க!!
பெரும்பாலும் ரயிலில் தூரப் பயணம் செல்லும்போது உடன் வருபவர்களுக்கும் எடுத்துச் செல்லும் உணவை பகிர்ந்து கொடுப்பது வழக்கம். இதை யாருமே தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இனிமேல் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.
ரயிலில் அறிமுகம் இல்லாதவங்க கொடுத்த சாப்பாட்டை சாப்பிடாதீங்கன்னு ரயில்வே போலீசாரும் ரயில்வே துறையும் பயணிகளுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுத்துட்டே இருக்கு. ஆனாலும் ரயிலில் தூர பயணம் செய்யும்போது பயணிகள் உணவு பொட்டலம் கட்டி எடுத்து வருவது வழக்கமான ஒன்று. ரயிலில் பகிர்ந்து சாப்பிட்டு பயணத்தை என்ஜாய் செய்வாங்க. சக பயணிகளுக்கும் சாப்பாடு தருவாங்க. ஆனா இப்படி ரயிலில் சாப்பாடு பகிர்ந்து கொடுத்த குடும்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏன் உணவை வாங்கி சாப்பிடக் கூடாது. சாப்பிட்டா அது அவங்களோட ஓன் ரிஸ்க் தானே என்ற எண்ணம் வரலாம். ஆனா இப்படி உணவு பொட்டலத்தை பகிர்ந்து சாப்பிட்டவங்க கைதுக்கு பின்னாடி பெரிய ரகசியம் இருந்திருக்கு. அது என்னன்னு தொடர்ந்து படிங்க.
ரயிலில் உணவு பொட்டலம் கட்டிக்கிட்டு ஒரு நல்ல குடும்பத்தை போல பயணம் செய்தவங்க போதை கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா இருந்தவங்களாம். மேலோட்டமா ரொம்ப நல்ல மரியாதையான குடும்பத்தை போல இருந்த மொத்த குடும்பமும் போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவங்களாம். இவங்க பெரிய பெரிய பைகளை தோளில் போட்டுகிட்டு சிரிச்சுக்கிட்டே ரயில ஏறினாங்க. அதுமட்டுமில்லாம அவங்க ஒரு மரியாதையான குடும்பம்ங்கிறத காட்டுவதற்காக உடன் இருந்த சக பயணிகளுக்கும் உணவயை பகிர்ந்து கொடுத்துள்ளனர். ஆனா இந்த விஷயத்தை முன்னாடியே தெரிஞ்சு வைச்சிருந்த போலீசார் இவங்கள கைது செய்யுறதுக்காக நல்ல திட்டம் போட்டு வச்சு இருந்தாங்க.
போலீசார் ரயிலில் அதிரடியாக நுழைந்து 45 வயசு அனிதா என்ற மனோ, 26 வயசு அமான் ராணா, 16 வயசு பெண் ஒருவரை கைது செய்தனர்.
டெல்லியோட சிறப்பு போலீஸ் கமிஷனர் தெபேஷ் ஸ்ரீவத்சவா தலைமையில 'கவச குறியீடு'ங்கிற பெயரில் ஆபரேஷன் நடந்துச்சு. இந்த ஆபரேஷன் மூலமா இந்த போதை கடத்தல் கும்பலில் மொத்த குடும்பமும் இருந்தது தெரிய வந்துச்சு. டெல்லி போலீஸ் துறையோட குற்றப்பிரிவு போலீசார் இந்த மூணு குற்றவாளிகளையும் கைது செய்தனர். இந்த ஆபரேஷன் மூலமா மொத்த போதை கடத்தல் கும்பலும் சிக்கிடுச்சு. கைது செய்யப்பட்டவங்ககிட்ட இருந்து வெவ்வேறு பகுதிகள்ல வைச்சிருந்த 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கு. இது தவிர இந்த போதை கடத்தல் கும்பலுடன் இன்னும் நாலு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து இருக்காங்க.
கூடுதல் சிபி சஞ்சய் பட்டியா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையோட ஆரம்பத்துல அனிதா மற்றும் அமான் ரொம்ப நல்ல குடும்பத்தை போல நடிச்சு போதை கடத்தல் செய்துட்டு இருந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வந்துச்சு. இதையடுத்து இவர்களைப் பிடிக்க எஸ்பி நரேந்திர பெனிவால் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரி சந்தீப் துஷார் களத்துல இறங்கினாங்க. அவங்ககிட்ட இருந்து 41.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோட மதிப்பு 5 மில்லியன் ரூபாய். இவங்க ஆந்திர பிரதேசத்துல இருந்து ஒடிசா அப்புறம் அங்க இருந்து நாட்டோட தலைநகரான டெல்லிக்கு போதைப் பொருள் சப்ளை செய்துட்டு இருந்தாங்கன்னு தெரிய வந்துச்சு.