வெள்ளக்காடாய் மாறிய மும்பை..! அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே..! 

மகாராஷ்டிர மாநிலம் புனே, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த திடீர் கனமழையால் காணும் இடங்களில் எல்லாம் வெள்ளம் தேங்கி உள்ளது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு,காலை முதல் மாலை வரை பெய்த கனமழையால் பூனேவில் மட்டும் 10 சென்டி மீட்டர் மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மழை நின்று இருந்தாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஒரு விதமான பதற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் பெய்த கனமழையால் மும்பை எப்படி காட்சி அளிக்கிறது என்பதை பாருங்கள்..

2

3

4

5

6

7