வலிமை படம் பற்றி பேசி சீரியல் நடிகை ஒருவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரை அஜித் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவதாக கண்ணீர் மல்க இன்ஸ்டாகிராமில் நேரலையில் தெரிவித்துள்ளார். 

பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது மிகப்பெரிய அளவில் பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது போல, தற்போது வலிமை படம் பற்றி பேசி சீரியல் நடிகை ஸ்ரீநிதி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரை அஜித் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவதாக கண்ணீர் மல்க இன்ஸ்டாகிராமில் நேரலையில் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

இந்நிலையில், பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது மிகப்பெரிய அளவில் பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது போல, தற்போது வலிமை படம் பற்றி சீரியல் நடிகை ஸ்ரீநிதி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.அவரை அஜித் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவதாக கண்ணீர் மல்க இன்ஸ்டாகிராமில் நேரலையில் தெரிவித்துள்ளார். 

படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த அவரிடம் மீடியாகாரர்கள் படம் எப்படி இருந்தது என கேட்க "அஜித் சார் கியூடாக நடித்து இருக்கிறார். படம் ஓடுவதை விட பைக் தான் அதிகம் ஓடுகிறது" என கூறினார்.

இதனால் கோபமான அஜித் ரசிகர்கள் ஸ்ரீநிதியை இன்ஸ்டாகிராமில் வறுத்தெடுத்தனர். இதனால் கலக்கத்துடன் ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார்.

அதில் அவர், "நான் காசு கொடுத்து படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என சொல்ல கூட கருத்து சுதந்திரம் இல்லையா. நான் விஜய் ரசிகை என்பதால் தான் இப்படி சொன்னேன் என கூறுகிறார்கள். நான் விஜய் ரசிகை அல்ல, நிஜத்தில் சிம்பு ரசிகை." என்றார். 

View post on Instagram

"நான் பேசியதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது" எனவும் உறுதியாக கூறி இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.