சேம்சங் கேலக்ஸி நோட் 7 பற்றி  நமக்கு தெரியும். மொபைல் பிரியர்களின் மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருந்த , இந்த சேம்சங் கேலக்ஸி நோட் 7  , சில  நாட்களுக்கு முன் , பல  சர்ச்சையில் சிக்கியது.

குறிப்பாக ,  விமானத்தில்  கூட  எடுத்து  செல்வதற்கு  தடை  விதிக்கபட்டது. காரணம் , திடிரென , தீப்பிடித்து  எரிவதே. இதனை  தொடர்ந்து   வந்த  பல புகார்களின்  அடிப்படையில், சேம்சங் கேலக்ஸி நோட் 7  ரீப்ளேஸ் செய்ய  கூடிய  ஒரு வாய்ப்பை  கொடுத்தது   சேம்சங். இருந்தாலும்  இதுவும்  தோல்வியில் முடியவே, தற்போது  முழுவதுமாக சேம்சங் கேலக்ஸி நோட் விற்பதற்கு  தடை செய்யபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது , “யூனிக் ரிடர்ன் கிட் என்ற ஒரு ஸ்மால் பேக்,வழங்குகிறது  சேம்சங். இது ஒரு  தெர்மல் இன்சுலேட்டட் பாக்ஸ், இதில், ஒரு ஜோடி கிளவுஸ் வைக்கப்பட்டுள்ளது.இதன்  மூலம், சேம்சங் கேலக்ஸி நோட் மொபைல் திருப்பி அனுப்பலாம் என  சேம்சங்  நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இதனை ரோட் ட்ரான்ஸ்போர்ட் மூலாமாக தான்  அனுப்ப  வேண்டும்..

இதே போன்று  வேறு ஒரு தெர்மல்இன்சுலேடட்  பாக்ஸ் உள்ளது. இதில்  உள்ள  ஸ்டாடிக் ஷீல்ட் மூலமா , நன்கு  கவர்   செய்து , வேறு  எந்த ஒரு  இடத்திலும் பையர் ஆகாமல் இருக்க ஒரு பாதுகாப்பான  முறையில் ,  சேம்சங் கேலக்ஸி நோட் திரும்ப  அனுப்ப  இந்த கிட்  அறிமுகம்  செய்துள்ளது.

ஸோ , உங்களிடம்  உள்ள சேம்சங் கேலக்ஸி நோட் மொபைலை திரும்ப  அனுப்ப  வேண்டும் என்றால், அருகில் உள்ள  சேம்சங்  ஷோ ரூமை  அணுகலாம் . ........