மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி துன்புறுத்தல்..! பள்ளி தாளாளரின் செய்த அதிர்ச்சி காட்சி..! 

பள்ளி தாளாளர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ளது புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி. இன்று திடீரென இந்த பள்ளியின் முன் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என விசாரித்தனர்.

அப்போது தெரிய வந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது இந்த பள்ளியின் தாளாளர் மரிய அண்டனி ராஜ் என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தான் வைத்துள்ள மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை ஓட விட்டு அதனை மாணவர்களிடம் காண்பித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். பின்னர் பள்ளி தாளாளர் ஆண்டனிராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.