தனிமைப்படுத்தப்பட்டார் "சவுதி அரசர்"! அரச குடும்பத்தில் மட்டும் 150 பேர் தனிமை! கொரோனாவால் கலங்கும் சவூதி! 

கொரோனா பாதிப்பால் சவூதி அரச குடும்பத்தில் மட்டும் 150 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. இந்த கொரோனாவிற்கு சாதாரண முதல் அரசியல் வாதிகள்,பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரையும் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தினந்தோறும்1000- கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த ஒரு நிலையில் சவுதி அரசர் மற்றும் பட்டத்து இளவரசர் உள்பட150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதன் படி,சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்ற தகவல் கிடைத்து உள்ளது. மேலும் அரச குடும்பத்திற்கு சிகிச்சை அளித்து வரும் ரியாத்தில் அமைந்துள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு, தற்போது 500 படுக்கைகளை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தவிர்த்து அரச குடும்பத்தில், கிங் பைசல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாதாரண குடும்ப உறுப்பினர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா  தோற்று இருப்பதால் 84 வயதான அரசர் சல்மான் ஜெட்டா  தீவு அரண்மனைக்கும், இன்னொரு தீவுக்கு பட்டத்து இளவரசர் சல்மான் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

பொதுவாகவே அரச குடும்பத்தில் உள்ள 15,000 கும் மேற்பட்ட உறுப்பினர்களில் இளவரசிகள் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வரும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிப்பிக்கப்பட்டு உள்ளது    

மொத்தம் உள்ள சவூதி அரேபிய மக்கள் தொகையில் மொத்தம் 3.3 கோடி மக்களில் இதுவரை 2,932 பேர்கள் பாதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை பலனின்றி 41 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.