சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையில் உள்ள சுதாகரன் இளவரசி சசிகலா ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

ஆண்டுதோறும் சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே சிறையில் இருப்பதால், பிறந்த நாள் கொண்டாட வில்லை. இந்த நிலையில் இன்று சசிகலாவின் பிறந்தநாள் என்பதால் யாரிடமும் பேசாமல் அமைதியாக மௌன விரதம் இருந்து உள்ளார். இருப்பினும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான புகழேந்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

 

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,
 
"அமமுக வில் இருந்து யார் விலகி சென்றாலும் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் டிசம்பர் அல்லது அதற்கடுத்த இரண்டு மாதத்திற்குள் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார். அப்போது அவரிடம் பேசிவிட்டு பிறகு எந்த முடிவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார் புகழேந்தி