Asianet News TamilAsianet News Tamil

Sankashti Chaturthi: பௌர்ணமி திதியை ஒட்டிய சங்கடஹர சதுர்த்தி...விரதம் இருந்து வழிபடும் முறை! முழு விவரம் உள்ளே

Sankashti Chaturthi 2022: வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால், நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கி கிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதிலும் விநாயாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் அவரை வழிபட இன்னும் கூடுதல் சிறப்பு ஆகும். 

Sankashti Chaturthi Pooja Palangal 2022
Author
Chennai, First Published May 19, 2022, 4:07 PM IST

வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால், நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கி கிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதிலும் விநாயாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் அவரை வழிபட இன்னும் கூடுதல் சிறப்பு ஆகும். 

Sankashti Chaturthi Pooja Palangal 2022

 இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் நான்காம் நாளில் அதாவது,  இன்று மே மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். 

 விநாயகர் சதுர்த்தி:

 இந்த நாளில்மாலை வேளையில் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் .குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் பெறலாம். 

Sankashti Chaturthi Pooja Palangal 2022

பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் விநாயகர் சதுர்த்தி:

 அதிலும் குறிப்பாக, பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் கடவுள் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம்காலமாக உள்ள ஐதீகம்.

விரதம் இருந்து வழிபடும் முறை:

Sankashti Chaturthi Pooja Palangal 2022

சதுர்த்தி திதியில் ஸ்னாநம் செய்து துவங்கி மாலை வேளையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல்  மாலை சாற்றுவதும் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது சிறந்த பலனை கொடுக்கும். வீட்டிலேயே கொழுக்கட்டை, சுண்டல் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம். 

 இந்த நாளில், விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால், காரியம் சித்தி அடையும். திருமண யோகம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட நாள் இருந்து வந்த கடன் தொல்லை தீரும்.  எனவே, விநாயகரை மேற்சொன்ன வழிமுறைகளில் வழிபட்டு பயன் பெறுங்கள்..

மேலும் படிக்க,,,,Sani Peyarchi 2022: ஜூன்5 ம் தேதி சனியின் வக்ர பெயர்ச்சி...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்...யோகம் பெறும் ராசிகள்..


 

Follow Us:
Download App:
  • android
  • ios