“உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி நாம் அனைவரும் கேட்டிருப்போம் . அதற்கேற்றவாறு நம்மவர்கள் அதிக உப்பு போட்டு உண்ண தொடங்கிவிட்டனர். அதாவது உலகிலேயே அதிக உப்பு பயன்படுத்தி உண்ணும் பழக்கம் இந்தியர்களுக்கு அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
பாதிப்பு என்ன ?
உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு காரணம் அதிக உப்பு நம்மவர்கள் எடுத்துக்கொள்வதே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நம் கண் முன்னே நம்மில் பல பேருக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு உள்ளது என்பதை பார்க்கமுடிகிறது
காரணம்:
கார சாரமான மசாலா மற்றும் உப்புச்சத்து நிறைந்த உணவுகளையே இந்தியர்கள் அதிகம் உண்பதும், ஊறுகாய், நொறுக்குத் தீனிகள் தொடங்கி, இறைச்சி வரை அனைத்திலுமே, இந்திய மக்கள் உப்பு, காரத்தை அதிகளவு சேர்த்துக் கொள்வதுமே காரணம் என கூறப்படுகிறது.
119 மடங்கு அதிகமான உப்பு :
பரிந்துரைக்கப்பட்ட அளவு உப்பை எடுத்துக்கொள்வதை விட ,119 மடங்கு அதிகமான உப்பு எடுத்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் ...!
தினமும், 2 கிராம் உப்பு மட்டுமே உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஆனால்
இந்தியர்கள் மட்டும் இதில் விதிவிலக்காக, உப்பு நிறைந்த உணவையே அதிகம் விரும்பி சாப்பிடுவதால் இது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
