இரண்டாம் உலகப்போரில் கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய அதிபர் சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கடற்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காரணமாக வைத்து அதிபர் விளாடிமிர் புதின் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று, இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்டார். அதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோக்லாந்து தீவிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதிக்கு சென்றடைந்த அவர், சுமார் 50 அடி கடல் ஆழத்தில் மூழ்கி இருந்த நீர்மூழ்கி கப்பலை பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,"இன்று ரஷ்ய கடற்படை தினம் கொண்டாடப்படுவதால், தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் மேலும் ரஷ்ய மக்கள் எந்த அளவிற்கு உழைப்பாளி மற்றும் அவர்களின் மிகத் துரிதமான பணிகளை புரிந்து கொள்வதற்காகவே இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் கடலில் 50 அடிவரை உள்சென்று, பார்வையிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.