கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

கருப்புபண தடுப்பு, ஊழல் பண பதுக்கல், வரி ஏய்ப்பு  தடுக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் பணப்பட்டுவாடா, வரிஏய்ப்பு உள்ளிட்டவை மீண்டும் தலையெடுக்க தொடங்கியதால் புதிய 2 ஆயிரம் ரூபாயும் மெல்ல மெல்ல குறைத்துக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் டி பிரிண்ட் பத்திரிக்கை ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய 2000 ரூபாயை அச்சிடும் பணியை ரிஸர் வங்கி நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வரும் காலங்களில் 2000 ரூபாய் பழக்கம் படிப்படியாக குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.