risky selfie and how to change our mind from taking risky selfie

எங்கெல்லாம் செல்பி எடுத்தால் உயிர் பலியாகும் தெரியுமா..? இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு பதிவு..!

குல்பி ஐஸ் பற்றி கேட்டால் கூட தெரியாது ஆனால் செல்பி என்றால் சிறு குழந்தைகளுக்கும் தெரியும்...அந்த அளவிற்கு செல்பி முன்னேற்றம்..அதாங்க செல்பி எடுப்பதில் அடிமையானார்கள் ஏராளம்.....

அப்படி என்னதான் அதில் உள்ளதோ..? என்று கண்முன்னே பெரியவர்கள் புலம்புவார்கள் அல்லவா.....

சமீப காலத்தில் செல்பி மோகம் இளைஞர்களிடம் அதிக அளவில் இடம் பிடித்து உள்ளத்தால், அதனால் விபரீதம் தான் அதிகரித்து காணப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் செல்பி எதற்கெடுத்தாலும் செல்பி, அவ்வாறு எடுக்கும் செல்பி போட்டோக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இன்றைய இளைய சமூதாயத்தினர்

சரி வாங்க...எங்கெல்லாம் செல்பி எடுத்தால் உயிர் பலி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்...

விலங்குகளுடன் செல்பி எடுப்பது

உதாரணம்: பாம்பு

மலைப்பாம்பு கிராமங்களில் எதாவது பிடிபட்டால் அதனை தன் கழுத்தில் சுற்றிக்கொள்வது ...

கடற்கரை

அலைகள் அதிகமாக இருக்கும் இடங்களில், நண்பர்களுடன் அப்படியே சாய்ந்தவாறு செல்பி எடுத்து, தவறி விழுவது...

வாட்டர்ஃபால்ஸ்

ஆறுகளின் அருகில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி விழுதல்

படகில் அமர்ந்தபடி செல்பி எடுப்பது

துப்பாக்கி வைத்துக் கொண்டு செல்பி எடுப்பது

ரயில்பாதையில் நின்றபடி, ரயில் வருவதை கூட கவனிக்காமல் நின்றுக்கொண்டு செல்பி எடுத்து, அப்படியே அடிபட்டு உயிர் விடுவது...

இப்படி பல ஆபத்தான இடங்களில் நின்றுக்கொண்டு செல்பி எடுப்பதில் என்னதான் ஆர்வமோ..? இதனை இளைஞர்கள் கொஞ்சமாவது புரிந்துக்கொண்டு ரிஸ்க் எடுக்காமல் செல்பி எடுத்துக் கொள்வதே நல்லது...

உயிரை காவு வாங்கும் இப்படிப்பட்ட செல்பி தேவைதானா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த தகவல் மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.