Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு :70% வெற்றி! டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி!

அதாவது சார்ஸ்  என்கோவிட் - 2 விற்கு எதிராக செயல்படும் "சிந்தடிக் பாலி பெப்டைடு" கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது  முதற்கட்ட வெற்றி. காரணம்....70% சரியான மருந்தாக  இது உள்ளது.

research coronavirus discovery success sudha seshayyan
Author
Chennai, First Published Apr 22, 2020, 1:36 PM IST

 

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு :70% வெற்றி! டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி!

சார்ஸ் கோவிட்- 2 தடுக்க தேவையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்  மருத்துவ பல்கலைக்கழகம் இறங்கி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன்  ஓர் வீடியோ மூலம், அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்து பேசி உள்ளார்.

research coronavirus discovery success sudha seshayyan

அதில்,  

கடந்த 3 வாரமாக, கோவிட்-2 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்து  வருகிறோம்.பொதுவாகவே மருந்து கண்டுப்பிடிக்க ஆய்வகத்தில் இந்த வைரஸ் வைத்து, கல்ச்சர்  செய்யப்பட்டு, அதில் ஏற்படக்கூடிய மாற்றம் மற்றும் பண்புகள் குறித்து ஆராயப்படும். இவ்வாறு செய்யும்  போது ஆபத்து அதிகமாக இருக்கும். சில சமயங்களில் இந்த வைரஸ் பரவ கூட வாய்ப்பு உள்ளது. ஆனால்  தற்போது மேம்படுத்தப்பட்ட முறையில்,ரிவர்ஸ் வேக்சினாலஜி முறை உள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாகவே இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது

ரிவர்ஸ் வேக்சினாலஜி

ரிவர்ஸ் வேக்க்ஷினாஜி முறையில் நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க உயிரி தகவியல், பயோ இன்பர்மேட்டிக்ஸ் இரண்டு துறையும் இணைந்து வைரஸ் மரபணு (ஜீன் செக்யூனிஸ் ) தகவலை கணினித்துறையில் சோதனை செய்து, எந்த தடுப்பு மருத்து வேலை செய்யும் என்பதை சோதித்து வருகிறோம்

எங்களுடைய நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர். புஸ்கலா மற்றும் நுண்ணுயிரியல் துறை தலைவர் தலைவர் டாக்டர் சீனிவாசன், இவர்களின் பரிந்துரையின் அடிப்படியில் அவர்கள் கொடுக்கும்  அலோசோனைகளை ஏற்று ஆராய்ச்சி மாணவர் டாக்டர் தம்மன பஜந்திரி ஈடுபட்டு வருகிறார். தானும் தன்னுடைய முழு  ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் கொடுத்து வருகிறேன்

இதன் முயற்சியின் பலனாக தற்போது, "வேக்சின் கேண்டிடேட்" கண்டுபிடித்து உள்ளோம். அதாவது சார்ஸ்  என்கோவிட் - 2 விற்கு எதிராக செயல்படும் "சிந்தடிக் பாலி பெப்டைடு" கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது  முதற்கட்ட வெற்றி. காரணம்....70% சரியான மருந்தாக  இது உள்ளது என்பதே...

ஆனால் முழு வெற்றி பெற அடுத்த கட்ட சோதனை செய்ய  வேண்டி உள்ளது. அதற்காக மருத்துவ  ரெகுலேட்டரி ஏஜெண்சியிடம் அனுமதி பெற்று, அமெரிக்காவில் உள்ள தடுப்பு மருந்து மையத்துடன் இணைந்து அடுத்த கட்ட ஆராய்ச்சியில் இறங்கி  சோதனை செய்ய வேண்டி உள்ளது. எனவே டாக்டர் எம்.ஜி.ஆர்  மருத்துவ பல்கலைக்கழகத்தின் நால்வர் அடங்கிய குழு விரைவில் இதற்கான மருந்தை கண்டுபிப்போம் என்ற நம்பிக்கை  எங்களுக்கு உண்டு " என தெரிவித்து உள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios