மூவர்ணத்துடன் குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்வதற்கு உங்களது வீட்டில் வித்தியாசமான ரெசிபி செய்து  அசத்துங்கள்.

இந்தியாவில் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 தில்லி மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் குடியரசு தின விழாவையொட்டி, முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைய தினத்தில் நாம் மிகவும், மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உண்டு மகிழ்வதற்கு சிறப்பு ரெசிபி உங்கள் வீட்டில் தயார் செய்து அசத்துங்கள்.

இந்நிலையில் தற்போது, பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மூவர்ண கொடி வடிவில் ரெசிபி செய்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது, அந்த ரெசிபி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் அதற்கூறிய செய்முறை விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளார்.

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

நெய் - 5 டீஸ்புன் 

ஏலக்காய் பொடி - 1 டீஸ்புன் 

சர்க்கரை - 1 கப் 

உப்பு தேவையான அளவு 

முந்திரி - 1 கப் 

பச்சை வண்ண கலர் - 1 கப் 

வெள்ளை வண்ண கலர் - 1 கப் 

ஆரஞ்ச் கலர் - 1 கப் 



செய்முறை :

முதலில் கடாயினை சூடாக்கி ரவை 1 கப்பை நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு 1 டீஸ்புன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு, ரவையினை மூன்று பங்குகளாக பிரித்து கொள்ள வேண்டும். முதலில், ஆரஞ்ச் கலர் எசன்ஸ் 1 கப் ரவையுடன் எடுத்து கடாயில் ஒன்றாக கலக்க வேண்டும். தண்ணீர் வற்றும் வரை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். 

பிறகு பச்சை கலர் எசன்ஸ் 1 கப் ரவையுடன் எடுத்து கடாயில் ஒன்றாக கலக்க வேண்டும். நெய் 1 டீஸ்புன் தண்ணீர் வற்றும் வரை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். வெள்ளை கலருக்கும் இதே போன்று செய்முறை வேண்டும்.

பிறகு, மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக பச்சை, வெள்ளை, ஆரஞ்சு என்ற வரிசையில் அடுக்கடுக்காக ஒரு தட்டில் அடுக்க வேண்டும். பிறகு ஆறா வைத்து கத்தி கொண்டு கட் பண்ணினாள் உடனே மூவர்ண ரெசிபி தயார், இது போன்ற செய்முறை விளக்கம் கொண்ட வீடியோவை அந்த பெண் பதிவிட்டுள்ளார்.மேலும், பல ரெசிபியின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.