இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பொருட்டு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் வீரியம்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு  நடவடியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலை  இல்லாமலும், பணம் இல்லாமலும் அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்ற அனைத்தும் விட உயிர் மிகவும் முக்கியம் அல்லவா ? அதற்காகத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டின் மூலம் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

திட்டத்தின் விவரம்
 
வயது :3 முதல் 60 வயதுள்ளவர்கள் சேர முடியும்.
தொகை : ஓராண்டுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு செய்துகொள்ளலாம்.
 
இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்காக தேவையான முழு செலவையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். மேலும் தனிமை முகாமில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 50 சதவீத காப்பீட்டு தொகையும்  வழங்கும் என தெரிவிப்பித்து உள்ளது

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஜெயின் தெரிவிக்கும் போது, பொருளாதார இழப்பை சமாளிக்க முடியாமல் நிதி பற்றாக்குறை தவிர்க்கும் வகையில் மக்களுக்கு ஏதுவாக  இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. இது தவிர மற்ற சில திட்டங்களும் இருப்பதாக தெரிவித்து  உள்ளார். இதன் மூலம் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ரிலையன்ஸ் கொண்டு வந்துள்ள இந்த திட்டத்துக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர் மக்கள்  

அதன் படி,  

வேலை இழப்பு ஏற்படும் போதும் வருமானம்  இல்லாமல்  தவிக்கும்  போதும்  அதற்கும் தனித்தனியாக இழப்பீடு வழங்கும் கூடுதல் திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது  என  தெரிவித்து உள்ளார்.