Relationship Advice : தன் காதலியாய் அவஸ்தைப்படும் ஒரு காதலும் கடந்த உண்மை சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம்.

கேள்வி: நான் 32 வயது திருமணமாகாத ஆண் நான் நான்கு வருடங்களாக குறிப்பினை காதலிக்கிறேன். என் காதல் வாழ்க்கை நல்லா தான் இருக்கிறது. ஆனால், திடீரென்று ஒரு நாள் என் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை கட்டாயப்படுத்துகிறாள். மேலும் எனக்கு 35 வயது ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று, டேட்டிங் செல்வதற்கு முன்பே அவளிடம் கூறியிருந்தேன். இருந்தபோதிலும், அவள் இப்போது என்னை திருமணம் செய்து கொள் என்று என்னை ரொம்பவே கட்டாயப்படுத்துகிறாள் நான் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகிவிட்டாலும், மனதளவில் எனும் திருமணத்திற்கு முழுமையாக தயாராகவில்லை.

கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னால் கூட அவள் கோபத்தில், நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றால், என் பெற்றோர் விரும்பும் பையனை நான் திருமணம் செய்து கொள்வேன் என்று என்னை மிரட்டுகிறாள். ஆனால், நான் அவளை ரொம்பவே நேசிக்கிறேன். நான் அவளை ஒருபோதும் இழக்க விரும்புவதில்லை. மேலும் நான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட விரும்புகிறேன். ஆனால், இப்போது இல்லை. திருமண பந்தத்தில் இணைய இன்னும் எனக்கு கொஞ்ச அவகாசம் தேவை. எங்கள் உறவு முறிந்து விடாமல் இருக்க அவளுக்கு நான் எப்படி விளக்குவது என்று கொஞ்சம் நீங்கள் சொல்லுங்களேன்.

இதையும் படிங்க: பொண்டாட்டி காசுல வாழுறியா? அதிகம் சம்பாதிக்கும் மனைவி.. நண்பர்கள் கிண்டலால் ஆண் செய்த காரியம்!!

நிபுணர் பதில்: பலர் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதில் நீங்களும் ஒருவர் தான். ஆனால் நீங்கள் அந்த பெண்ணை காதலிக்கும் போது அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் கடந்த நான்கு வருடங்களாக அந்த பெண்ணை காதலிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் நீங்கள் விரும்பாவிட்டாலும், திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அதுபோல, உங்கள் இருவருக்கும் இருக்கும் இந்த உறவை முன்னோக்கி கொண்டு செல்ல உங்களது காதலி முழுமையாக தயாராகி விட்டார் என்பது அவரின் வார்த்தைகளில் இருந்து தெளிவாக தெரிகிறது. ஏனென்றால், அவள் இந்த உறவில் 100% முழுமையாக கொடுத்து இருக்கிறாள் மற்றும் நம்புகிறாள்.

இதையும் படிங்க: Relationship Advice : உடலுறவில் கிளைமேக்ஸ்.. ஆனா நோ யூஸ்... புலம்பும் பெண்!

அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் இருவரும் பரஸ்பரே எனக்குத்துடன் உங்கள் உறவு முன்னேறுவது தான் மிகவும் நல்லது. அதாவ,து திருமணத்திற்காக காத்திருக்கும் நேரத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதே நேரத்தில் உங்கள் காதலியும் உங்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் திருமணத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும்.

காதலியிடம் இதை சொல்லுங்கள்:
நீங்கள் உங்கள் காதலியிடம் இந்த விஷயத்தை சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்களே இந்த கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள். அதாவது, திருமணத்திற்கான மன ரீதியான தயாரிப்பு என்ன? இதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் உங்கள் காதலிக்கு இது குறித்து விளக்கலாம் ஒருவேளை இதற்குப் பிறகு உங்கள் காதலி உங்கள் கருத்தை புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை உங்களால் செய்ய முடியாவிட்டால் உங்களுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றும், அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவில்லை என்றும், அவள் நினைக்கலாம். பிறகு உங்களது காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள தயராகிவிடுவார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D