Asianet News TamilAsianet News Tamil

Brain Fog: ஒமிக்ரானிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவாற்றல் பாதிக்கும்...ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!!

ஒமிக்ரானிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள், பற்றி சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில், ஒமிக்ரானிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவாற்றலில் (Brain Fog) பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Recovered Omicron patients are affected with memory loss
Author
Chennai, First Published Jan 24, 2022, 2:28 PM IST

ஒமிக்ரானிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள், பற்றி சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில், ஒமிக்ரானிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவாற்றலில் (Brain Fog) பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ்,  ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

Recovered Omicron patients are affected with memory loss

இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (Omicron Patients) ஏற்படும் உடல் உபாதைகள் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.மேலும், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சமீபத்திய டெய்லி மெயிலில் வெளியான அறிக்கையின்படி, கரோனா நோயின் அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், (Brain Fog) நினைவாற்றல் பாதிப்பு பிரச்சனை மக்களிடம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. (Brain Fog) நினைவாற்றல் பாதிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் (Corna Patiens) தங்கள் பரிசோதனையின் போது அத்தகைய அறிகுறிகளை உணரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகே அவை கண்டறியப்பட்டுள்ளது.  

ஒமிக்ரான் (Omicron Variant) நினைவகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,  நினைவாற்றல் பாதிப்பின் (Brain Fog) ன் தாக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் சுமார் 6 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும். நீண்ட நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசை வலி, சீரற்ற இதயத்துடிப்பு, இருமல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். மறுபுறம்,நினைவாற்றல் பாதிப்பின் (Brain Fog)  தாக்கம் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை, வேலை செய்ய இயலாமை மற்றும் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மூலம், 26 வயதுடைய சுமார் 136 நபர்களிடம்  இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 பேர் தங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்ததாகவும், லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இவர்களின் நினைவாற்றல் மற்றும் கவனம் தொடர்பான பல சோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவர்கள் அனைவரது எபிசோடிக் மெமரி (Episodic Memory) மோசமாக இருப்பது தெரிய வந்தது. இவர்களால் தங்கள் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதும்  ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

Recovered Omicron patients are affected with memory loss

இதற்கு முன்பாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) வழங்கிய தரவுகளின் படி, கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு ஐந்து வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு லேசானது முதல் கடுமையான கரோனா நோயின் (போஸ்ட்  கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் இருந்துள்ளன.

 ஓஎன்எஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 10 பேரில் ஒருவருக்கு கரோனா நோயின் (போஸ்ட்  கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios