Asianet News TamilAsianet News Tamil

முதல் இரவில் பால் ஏன் குடிக்க சொல்லுகிறார்கள் தெரியுமா..?

முதலிரவில் பால் எதற்காக கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கான பதில் இதோ...

reasons why indian copule drinking saffron milk on the first night in tamil mks
Author
First Published Feb 29, 2024, 12:25 PM IST

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும்.. அதிலும் இந்து பாரம்பரியத்தில் திருமணத்தில் பல சாஸ்திரங்கள், சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மட்டுமன்றி, புதுமணத் தம்பதிகள் ஒன்று சேரும் முதலிரவிலும் சில சடங்குகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா..?

reasons why indian copule drinking saffron milk on the first night in tamil mks

திரைப்படங்களில், முதலிரவில் மணப்பெண் ஒரு கிளாஸில் பால் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைவதும், பின்னர் இருவரும் பாலை பகிர்ந்து குடிப்பதும் போன்ற காட்சிகளை பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான். திருமணமானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். ஆனால், அது ஏன் என்று எப்போதாவது  யோசித்திருக்கிறீர்களா..? அதற்கான பதில் இங்கே..

reasons why indian copule drinking saffron milk on the first night in tamil mks

குங்குமப்பூ பால்: முதல் இரவு அன்று புதுமணத் தம்பதிகள் குடிக்கும் பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இந்த பாரம்பரியம் உள்ளது. மேலும், இந்த பால் பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயத்திற்கு அப்பால், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நீங்கள் புதிதாக திருமணமானவரா? முதலிரவில் "இந்த" பிரச்சனை வரலாம்..

இனிமையான திருமண வாழ்க்கை: இரு மனங்கள் இணையும் முதல் இரவில், மணமக்களுக்கு இடையே பல பிணைப்புகள் உருவாகிறது. இதுதான் இருவருக்கும் இடையிலான உறவின் ஆரம்பம் ஆகும். இந்தப் பிணைப்பை இனிமையாக்க தான் பாலில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. 

reasons why indian copule drinking saffron milk on the first night in tamil mks

பால் ஏன்? முதலிரவில், புதுமணத் தம்பதிகள் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் 
பால் கொடுக்கப்படுகிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, பால் தூய்மையான உணவாகவும், மிகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான இந்து  சடங்குகளில் கூட பால் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் முதலிரவிலும் பால் கொடுக்கப்படுகிறது. குங்குமப்பூ நல்ல நிறத்தையும் சுவையையும் தருவதால் அது பாலில் கலந்து கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் "முதலிரவில்" பின்பற்றப்படும் மோசமான சடங்குகள்...படிச்சா கண்டிபா ஷாக் ஆவிங்க..!!

காமசூத்ரா, லிபிடோ தூண்டுதல்: திருமண வாழ்க்கை பற்றிய குறிப்புகள் கொண்ட புத்தகம், முதல் இரவில் பால் குடிக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறது. தேன், சர்க்கரை, மஞ்சள், மிளகுத் தூள், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து குடிக்கலாம். குங்குமப்பூவுடன் குடிப்பதால் ஆண்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் என்று காமசூத்திரம் குறிப்பிடுகிறது.

reasons why indian copule drinking saffron milk on the first night in tamil mks

ஆரோக்கிய நன்மைகள்: குங்குமப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள், மன ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதனால் தான் பாலில் குங்குமப்பூ சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்த பாலை குடிப்பதால் முதல் இரவைக் குறித்துப் தம்பதிகளுக்குள் இருக்கும் பதற்றம் குறையும்.

நெருக்கம் அதிகரிக்கும்: முதலிரவில் இருவரும் பால் குடித்தால் தம்பதிகளிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். இது ஒரு புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க அடித்தளம் அமைக்கிறது. 

பால் பாரம்பரியம்: இந்த பால் கொடுக்கும் கலாச்சாரம் முதலிரவில் தொடங்கி 3 நாட்கள் பின்பற்றப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே காதல் நிலவும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை குங்குமப்பூ சேர்த்து பால் கொடுக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios