2036 இல் காட்டப்போகும் உண்மையான வடக்கு திசை..! 

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு திசையும் நமக்கு தெரியும். யாரையாவது நம் அருகில் அழைத்து திசையை காண்பிக்க சொன்னால் தத்ரூபமாக சொல்லிவிடுவார்கள்... இந்த திசை கிழக்கு இதற்கு எதிர் திசை மேற்கு என்றும், இந்த திசை வடக்கு இதற்கு எதிர் திசை தெற்கு என ..

ஆனால் நாம் சொல்லிக் கொடுத்திருக்கும் திசையும் காம்பஸ் காட்டும் திசையும் மாறுபடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் நேரம் மற்றும் அதன் திசைகான அளவீட்டை 1676 ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்படுகிறது. இது கிரீன்விச் தீர்க்க ரேகையை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் பூமியின் காந்தப்புலத்தின் வடக்கு திசைக்கும் காந்த முள் காட்டும் வடக்கு திசைக்கு வித்தியாசம் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது 360 வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் இசை துல்லியமாக காட்டும்... அதாவது காம்பஸ் கருவிகள் மிகத்துல்லியமாக 360 வருடங்களுக்கு ஒருமுறை வடக்கு திசையை காட்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் 2036 ஆம் ஆண்டில் காம்பஸ் கருவி காட்டும் துல்லியமான வடக்கு திசையை பொறுத்துதான் மற்ற திசைகளும் அமையும். இந்தக்கருத்தை இங்கிலாந்தின் ஜியாலஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்து உள்ளது.

காந்தப்புல திசை வேறுபாடு என்பது வருடத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே என்பதால் காம்பஸ் காட்டும் வடக்கு திசையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.