மக்களே... திறந்தவெளியில் மலம் கழித்தால் ரேஷன் அட்டை ரத்து..! நல்லதோர் அதிரடி முடிவு...! 

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க "தூய்மை இந்தியா திட்டத்தின்" மூலம் ஓர் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. 

மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில்  கிராமப்புற வீடுகளில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.என்னதான் கழிவறைகள் கட்டிக்கொடுத்தாலும் கூட இன்றளவும் பொதுவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்டி என்ற கிராம பஞ்சாயத்து திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை ஒழிக்க "இனி யாராவது திறந்தவெளியில் மலம் கழிப்பது தெரியவந்தால்" அந்த குடும்பத்தின் ரேஷன் அட்டையை ரத்து செய்யப்படும் என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது

மேலும் மலம் கழிப்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு வரி சலுகை வழங்க உள்ளதாகவும் கிராமசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஏன் திடீரென இப்படி ஒரு நடவடிக்கை என விசாரித்த போது, "ஜரன்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கழிப்பிடவசதி மற்றும் தண்ணீர வசதி இருந்தும் பொதுவெளியில் மலம் கழிப்பதை தடுக்க முடியாததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

இப்படி ஒரு முடிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.