சீனாவிடமிருந்து பெறப்பட்ட கொரோனா நோய் கண்டறியும் சோதனை கிட்டுகள் டெல்லி வந்தடைந்ததை அடுத்து, அதிலிருந்து பிரித்து 12 ஆயிரம் சோதனை கிட்டுகள் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

 டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொடுவரப்பட்ட 12 ஆயிரம் கிட்டுகளுடன் தற்போது 36 ஆயிரம் கிட்டுகள் கைவசம் உள்ளது.உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் குறித்து சோதனை மூலம் உறுதி செய்ய தேவையான கிட்டுகள் இந்தியாவில் இருப்பதாகவும், மேலும் தேவையான அளவுக்கு வெளிநாட்டில் இருந்து பெற முயற்சி எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் தற்போது 12 ஆயிரம் சோதனை கிட்டுகள் வந்தடைந்துள்ளது. சீனாவில் இருந்து பெறப்பட்ட சோதனை கிட்டுகளை மத்திய அரசு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தேவையான அளவிற்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 12,000 சோதனை கிட்டுகளை அனுப்பி உள்ளது மத்திய அரசு. இதன் மூலம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திலேயே ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை மிக எளிதாக உறுதி செய்ய முடியும்.கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு சோதனை கிட்டுகளை பிரித்து வழங்க சுகாதாரதுறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அதிகம் பாதித்த மாவட்டங்கள் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் அதிகம் நபர் இருக்கக்கூடிய ரெட் ஸ்பாட் பகுதி என அனைத்தும் கண்டறிந்து அதற்கேற்றவாறு கிட்டுகளை அனுப்பி வைக்கப்படும் என தெரிய வந்துள்ளது. தற்போது 12 ஆயிரம்  கிட்டுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதால் ஏற்கனவே இருந்த கிட்டுகள்  என மொத்தம் சேர்த்து தற்போது 36 ஆயிரம் சோதனைக் கிட்டுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.