ரமலான் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவினர் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் துறவு குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சானியா மிர்சா, ரஷித் கான் மற்றும் ராணா சஃப்வி வரை அனைவரும் தங்களுக்குரிய இப்தார் நோன்பு துறப்பு குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

சமீபத்தில் மெக்காவின் மதீனாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அவர் தனது இஸ்டாவில், "இஃப்தார் என் உடன்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அவர் தனது மகனுக்கு இப்தாரில் நோன்பு திறப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பதைக் காணலாம். மனதைக் கவரும் இந்த வீடியோ 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 176 ஆயிரம் விருப்பங்களையும், ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.

View post on Instagram


தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் 15ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், தனது நோன்பு துறப்பு குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், அவரது விருந்தில் சிறப்பு விருந்தினர்களாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரும், கேப்டனுமான ஹர்திக் பாண்டியா மற்றும் சக வீரர் நூர் அகமதுவும் கலந்துகொண்டுள்ளனர். ஹோட்டர் அறையின் தரையில் விரிக்கப்பட்டுள்ள கார்ப்பெட்டில் குளிர் பானங்கள் முதல், பழங்கள் மற்றும் அசைவ கறிகள் வரை விருந்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரஷீத் கான், பகிர்ந்துள்ள இந்த படத்திற்கு 473,000 க்கும் அதிகமான விருப்பங்களையும், 3.5,000 பெற்றுள்ளது.

View post on Instagram


பிரபல வரலாற்று ஆசிரியர், ராணா சஃப்வி, கொல்கத்தாவைச் சேர்ந்த அவரது தோழி சமைத்த ஹலீமை அனுப்பியதால் அவருக்கு சிறப்பு இப்தார் கிடைத்துள்ளது. ராணா தனது தோழி மன்சில் பாத்திமாவின் ஸ்பெஷல் ரமலான் ஹலீமை ருசிக்க விருப்பம் தெரிவித்தபோது இது நடந்துள்ளது. பாத்திமா, கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு சமைத்து கொரியர் மூலம் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தோழி அனுப்பிய படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ராணா, உன்னைப் போன்ற ஒரு தோழி கிடைத்ததற்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். எனக்கா, உணவு தயாரித்து, நேற்று கல்கத்தாவிலிருந்து அனுப்பினார். நொய்டாவில் இரவு உணவிற்கு சாப்பிடுகிறோம். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக மான்சி என ராணா குறிப்பிட்டுள்ளார்.

View post on Instagram


ரமலான் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும், இது மிகுந்த ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நேரத்தில் குர்ஆன் வெளியிடப்பட்டதால் இந்த புனித மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரமலானின் இறுதியில் ஈத் அல் பித்ர் அல்லது நோன்பு துறக்கும் பண்டிகை என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மூன்று நாள் கொண்டாட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.