தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

கடந்த ஒரு வார காலமாகவே, வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக அனல் காற்றுடன் வெப்பம் நிலவியது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்றே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நாளையும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய தினத்தில் குறிப்பாக 10 மாவட்டங்களில் வெயில்100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. மதுரை-106, கரூர் பரமத்தி-104, நெல்லை மற்றும் திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது என்றால் பாருங்களேன்.

இருந்தாலும், வருகிற 2  நாட்களுக்கு வெயிலே இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன், ஒரு சில இடங்களில் கனமான மழையும், நம்மை மகிழ்விக்க வர உள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது