Asianet News TamilAsianet News Tamil

சென்னைக்கு இன்று வாய்ப்பே இல்லையாம்..! என்ன மேட்டர் தெரியுமா..?

குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rain will be heavy in nilgiri, theni ,nellai district on 14th julay 2019
Author
Chennai, First Published Aug 14, 2019, 1:32 PM IST

கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் இந்த தருணத்தில் மீண்டும் நீலகிரி, தேனீ,  நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain will be heavy in nilgiri, theni ,nellai district on 14th julay 2019

அதே போன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது 

rain will be heavy in nilgiri, theni ,nellai district on 14th julay 2019

குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று மழைக்கான வாய்ப்பு கிடையவே கிடையாது என்றும்  நாளை மிதமான மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios