தமிழகத்தில் மழை..! அவதிப்படும் சென்னை மக்கள்.!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தமிழக மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரம் பொருத்தவரையில் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டரும், வேலூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. 

அதேபோன்று அதிகபட்ச வெப்ப நிலையாக சென்னையில் 39 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் விருதுநகர் வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தாலும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் அதனுடைய பாதிப்பு இப்போதே காண்பிக்க தொடங்கிவிட்டது. அதன்படி நேற்று மற்றும் இன்று அதிக வெப்பகாற்று உணர முடிகிறது. சென்னையை பொருத்தவரையில் இன்று அனல் காற்று அதிகமாக உள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் தருணத்தில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்தி, அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் சென்னையை பொருத்தவரையில் அதிக அளவு அனல்காற்று வீசுவதால் மழை இல்லாமல் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.