தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடற்கரை பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே இந்த கோடை காலத்தில் திடீரென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை நினைத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு ஓரளவிற்கு மழை பெய்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்றபடி எப்போதும் இருக்கும் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவ வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.