Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் செம மழை...! வெதர்மேன் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா..?

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. 

rain will be expected  for 2 days
Author
Chennai, First Published Jul 22, 2019, 3:33 PM IST

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இது குறித்து வெதர்மேன் தெரிவிக்கும்போது,

"இன்று சென்னையில் 27 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார். 

தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கேரளாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது.குடகில் மட்டும் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

 

இந்த நிலையில் சென்னையில் மடிப்பாக்கம் பல்லாவரம் கிண்டி தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது. இதுதவிர சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். நீண்ட மாதங்களுக்கு பிறகு சென்னையில் இது போன்ற ஒரு  காலநிலையை மக்கள் உணர்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios