மகிழ்ச்சியான செய்தி ..! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..! 

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் திநகர் கிண்டி தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்தி மக்கள் மனதை சற்று குளிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 2 மாத காலமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது.  தற்போது இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் அதற்கான நடவடிக்கையை ஆளும் அரசு விரைந்து எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வருகிறது.

இருந்தபோதிலும், போதிய அளவு மழை இருந்தால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மீள முடியும்