தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல் கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மற்ற இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக தேவாலாயாவில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூனே மற்றும் மும்பை மிக முக்கியமாக பெருமளவு பாதித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், ரயில் சேவை, மின்சார துண்டிப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.