மழை பெய்ய வாய்ப்பு...! கோடை வெயிலுக்கு நடுவே ஜில்லுனு மழை..! 

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் எப்போதுமே கோடை காலம் தொடங்கிய உடன் அதாவது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் தான் வெயில் சுட்டெரிக்க தொடங்கும்

ஆனால் இந்த வருடம் அவ்வாறு இல்லாமல் பிப்ரவரி மாத இடையிலேயே அதிக வெயில் அடிக்க தொடங்கி விட்டது. மேலும் பொதுமக்களும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பத்தின் காரணமாக பயணம் மேற்கொள்வதில் சிரமத்தை அனுபவித்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவது, அதிக வியர்வை உள்ளிட்டவற்றால் கடந்த சில நாட்களாக சிரமம் அனுபவித்து வந்தனர்.

இன்னும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இவ்வாறு உள்ளதே என பலரும் வேதனை கொள்ள செய்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சுமார் 15 நிமிடம் நல்ல மழை பெய்தது.

இத்தனை நாட்கள் தொடர்ந்து அதிக வெப்ப நிலையில் காணப்பட்ட இந்த தருணத்தில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலையில் அடையாறு கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது என்னவென்றால் குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போன்று வெளி மாவட்டங்களிலும் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.