தமிழகத்தில் மழை..! வானிலை ஆய்வு மைய தெரிவித்தது என்ன..? 

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரளவிற்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து உள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி, கோவை, சேலம்,திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொருத்தவரையில் வறண்ட வானிலை மட்டுமே நிலவும் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதியதாக உருவாகி உள்ள புல் புல் புயலால் பெரிய அளவில்  மழை  ஒன்றும் இருக்காது எனவும் கூறப்பட்டு உள்ளது.