நீதா அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட், mint Green color லெஹங்காவுடன் தனது திருமணத்தில் அணிந்த ஐந்து அடுக்கு மரகத நெக்லஸை மீண்டும் அணிந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நீதா அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் தனது மாமியாரைப் போலவே ஃபேஷன் அழகு ராணியாக வலம் வருபவர். எந்த ஆடை உடுத்தினாலும், நகை அணிந்தாலும் அவருக்கு நேர்த்தியாக இருக்கும். நகைகள் முதல் ஃபேஷன் வரை கோடிகளில் பொருட்களை வாங்கி குவிக்கிறார். அனந்த் அம்பானியுடனான திருமணத்தின் போது, ராதிகாவின் திருமண நகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ராதிகா அம்பானி வித்தியாசமாக மின்ட் க்ரீன் லெஹங்காவுடன் தனது திருமண நெக்லஸை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
மின்ட் க்ரீன் நிறத்திலான எம்ப்ராய்டரி லெஹங்காவை ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்தார். அழகாகவும் ஸ்டைலாகவும் காட்சியளித்தார். லெஹங்காவுடன் ஸ்லீவ் கட் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த டிசைன் இவரே தேர்வு செய்தது என்று கூறப்படுகிறது. அவர் அணிந்திருந்த மேலும் அவரை அழகாகக் காட்டியது. லெஹங்கா கனமாக இருப்பதால், ஆர்கன்சா துப்பட்டாவுன் லெஹங்கா இன்னும் அழகாக இருக்கிறது.
ராதிகா மீண்டும் அணிந்த திருமண நெக்லஸ்
ராதிகா மெர்ச்சண்ட்டிடம் அற்புதமான நெக்லஸ் சேகரிப்பு உள்ளது. இருப்பினும், லெஹங்காவுடன், அவர் மரகதம் பதிக்கப்பட்ட ஐந்து அடுக்கு ராணி நெக்லஸை மீண்டும் அணிந்தார். பிரபல நகை வடிவமைப்பாளர் நிஷா மேத்தா ராதிகாவின் திருமண நெக்லஸை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திருமண தோற்றத்தைப் பார்த்தால், அவர் நீண்ட நெக்லஸுடன் மெர்ச்சண்ட் குடும்பத்தின் பாரம்பரிய நெக்லஸையும் அணிந்திருந்தார். வைர ஜும்கா அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ராதிகா அடிக்கடி தனது தோற்றத்திற்காக விவாதிக்கப்படுகிறார்.


