Asianet News TamilAsianet News Tamil

முகத்துக்கு ஆவி பிடிப்பதால்  ஏற்படும் நன்மைகள்  என்ன ..?

purpose of-aavi-pidipathu
Author
First Published Jan 3, 2017, 3:38 PM IST


முகத்துக்கு ஆவி பிடிப்பதால்  ஏற்படும் நன்மைகள்  என்ன ..?

ஆவி பிடிப்பது   என்பது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டது  அல்ல. பழங்காலம்  தொட்டே , பின்பற்றப்படும்  முறைதான்  ஆவி பிடிப்பது.

நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதுவாக  இருந்தாலும்  ஆவி பிடிப்பதை வழக்கமாக   வைத்திருந்தனர்.

ஆனால், தற்போது கடைகளில் விற்கப்படுகிற கண்ட கண்ட கிரீம்களையும் போட்டு சருமத்தையும் முகத்தையும் பாழாக்கிக் கொள்கிறோம். ஏற்கனவே தூசுக்களால் முகத் துவாரங்களுக்குள் படிந்திருக்கும் அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் உள்ள கெமிக்கல்களும் சருமத்துக்குள் சென்று அழுக்காக மாறிவிடுகின்றன.

 இவற்றை வெளியேற்ற அப்போ என்னதான் வழி?

இயற்கையான முறையில், சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட எளிய வழி தான் ஆவி பிடித்தல்.

சருமத்தை அழகாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க , சூடான நீரால் ஆவி பிடிப்பது நல்லது.

ஆவி பிடித்தலால் உண்டாகும் நன்மைகள் :

  • ஆவி பிடித்தல் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
  • ஆவி பிடிப்பதால் சருமத் துளைகள் விரிவடைந்து, அவற்றில் உள்ள அழுக்குகள் விரைவாக வெளியேறும்.
  • வாரத்துக்கு ஒரு முறையாவது ஆவி பிடிப்பதன் மூலம் முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம்.
  • சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால், முகம் பொலிவிழந்துவிடும்.
  • முகத்தில் உள்ள அழுக்குகளை ஆவி பிடிப்பதன் மூலம் வெளியேற்றுவதோடு, ஆவி பிடித்த பின், சுத்தமான துணியைக் கொண்டு முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
  • ஆவி பிடித்தல் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் நீங்கிவிடும்.
  • ஆவி பிடித்தலால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். முகமும் மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். 

இது  போன்ற  பல  நன்மைகளை கொண்டது தான்  ஆவி பிடிப்பது..........!!

Follow Us:
Download App:
  • android
  • ios