பெண்ணிடம்  சில்மிஷம் : அதிகாரிக்கு முற்றிலும் “ இதை “ கட் பண்ணிடாங்க...!

பெண்ணிடம்  சில்மிஷம்  செய்த ,  அதிகாரிக்கு  வித்தியாசமான  தண்டனை  வழங்கியுள்ளது கர்நாடக  தொழிலாளர் நலத்துறை .

பெங்களூரில்  இயங்கி  வரும்  இன்புயூஷன் என்ற   மென்பொருள்  நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண்ணுக்கு , அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த  மூத்த  அதிகாரி  சந்திர  சேகர்  ,  பாலியல்  தொந்தரவு  கொடுத்துள்ளார்.

தொடர்ந்து இந்த  பிரச்சனையை  சந்தித்த  அந்தப்  பெண் , வேலையிலிருந்து  விடுபட்டு, அவர்  மீது  கர்நாடக  மாநில  தொழிலாளர்  நலத்துறையில்  புகார்  அளித்துள்ளார்.

தண்டனை  என்ன ?

இந்த விவகாரம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்ட தொழிலாளர் நலத்துறை, சில்மிஷத்தில்  ஈடுபட்ட  அந்த அதிகாரியின் இந்த ஆண்டிற்கான சம்பள உயர்வுத் தொகை,அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அடிப்படை சம்பளம் தவிர்த்த மற்ற சலுகைகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு இன்பியூஷன் மென்பொருள் நிறுவனத்திற்கு, உத்தரவிட்டடுள்ளது.இதனால்  சம  கடுப்பில்  உள்ளார்  அந்த  அதிகாரி...


அதுமட்டுமில்லாமல்,  மேலும் அடுத்த 60 மாதங்களுக்கு மாதம் தோறும் 50,000 ரூபாயை சந்திரசேகரின் சம்பளத்திலிருந்து பிடித்தம்  செய்து, அந்த  தொகையை  பாதிக்கப்பட்ட  பெண்ணிற்கு  தருமாறும்   உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.  

நிறுவனத்திற்கு  தலைவலி :

ஒருவேளை  அந்த சந்திர சேகர் , அந்த வேலையை  விட்டு சென்றால், அந்த  பணத்தை அந்த  நிறுவனமே   அப்பெணிற்கு, மாதந்தோறும் பணத்தை   வழங்க  வேண்டுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.