Asianet News TamilAsianet News Tamil

வீட்டிலேயே கோவில் புளியோதரை செய்வது எப்படி ?

puliyothrai preparation
Author
First Published Jan 4, 2017, 5:33 PM IST


வீட்டிலேயே கோவில் புளியோதரை செய்வது எப்படி ?

 என்னதான்  நம் வீட்டில் புளியோதரை செய்தாலும், அது கோவிலில்  கொடுப்பது போல்   சுவையாக  இருபதில்லையே  என்  நம்  மனது  நினைக்கும்.  அப்படி என்னதான்  கலந்து செய்வார்களோ   இப்படி மனக்கிறது ...சுவையாகவும் இருக்கிறது என  நினைப்பவர்களா  நீங்கள் ...?

 உங்களுக்காக  செய்முறை விளக்கம் :

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை :

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணை - 5 தேக்கரண்டி

வேர்கடலை - 1/4 கப்

கடுகு - 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

அரிசி - 2 கப்

வறுத்து பொடிக்க :

நல்லெண்ணை - 1 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

தனியா - 1/2 தெக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எள்ளு - 1 தேக்கரண்டி

செய்முறை :

 வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

 புளியை கரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

 இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

 புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

 20  நிமிடத்திற்கு  பிறகு பரிமாறவும்.

சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.

 

Follow Us:
Download App:
  • android
  • ios