பக்தி உடைய பெண்கள் சபரிமலைக்கு போக மாட்டார்கள்...!  இல .கணேசன் அதிரடி..! 

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாது என தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வர வேண்டும் என நினைப்பதை அரசு ஆதரிக்க வில்லை. சபரிமலை தீர்ப்பு சீராய்வு மனு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அவரிடமிருந்து பல்வேறு சட்ட நுணுக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள நிலையே தொடரும் என்றும், ஒருவேளை பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வர வேண்டும் என நினைத்தால் நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

மற்றபடி 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலைக்கு வருவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்த அவர் சபரிமலை கோவில் என்பது பக்தர்களுக்கான இடம்.. ஆர்வலர்களுக்கான இடமில்லை... என தெரிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இல.கணேசன், பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள்.சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும் என தெரிவித்து  உள்ளார்.