பிரியங்கா சோப்ரா போல இனி நீங்களும் உள்ளங்காலில் பூண்டு தடவுங்க.. உங்கள் உடலிலும் இந்த அதிசயங்கள் நடக்கும்!

Priyanka Chopra Rubs Garlic On Her Feet : பிரியங்கா சோப்ரா தனது உள்ளங்காலில் பூண்டை தேய்த்து மசாஜ் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உண்மையில், பூண்டை இப்படி பயன்படுத்துவது நல்லதா..? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

priyanka chopra rubs garlic on her feet know what are the health benefits in tamil mks

பிரியங்கா சோப்ரா, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் சமயத்தில் அவ்வப்போது தனது சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கியுள்ளார். 

அந்த வகையில், தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உண்மையில், அந்த வீடியோவில் பிரியங்கா தனது உள்ளங்காலில் பூண்டை தேய்த்து மசாஜ் செய்வதை நீங்கள் காணலாம். பூண்டை இப்படி பயன்படுத்துவதன் மூலம் அவரது ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். உண்மையில், உள்ளங்காலில் பூண்டை தேய்ப்பது நல்லதா..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

priyanka chopra rubs garlic on her feet know what are the health benefits in tamil mks

பூண்டை உள்ளங்காலில் வைத்து மசால் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..

வீக்கம் மற்றும் வலி குறையும்: உண்மையில் பூண்டில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், பூண்டை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் போது கால்களில் வீக்கம் அல்லது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அல்லது நீண்ட நேரம் நடந்து சில சமயங்களில் இந்த வகையான பிரச்சனையை நீங்கள் சந்தித்தால் உடனே, பிரியங்கா சோப்ரா சொன்ன இந்த பூண்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்: பூண்டில் இருக்கும் பண்புகள் காய்ச்சலை இயற்கையான முறையில் குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உங்களுக்கு காய்ச்சல் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனே பூண்டை நசுக்கி உங்கள் உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கலாம்.

இதையும் படிங்க: ரூ. 200 கோடி.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் OTT ஸ்டார் இவங்க தான்.. ஆலியா, தீபிகா படுகோன் இல்ல..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பூண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே நேரத்தில், இந்த பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே, உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், நீங்கள் தினமும் இரவில் தூங்குவதற்கு முன் 05 முதல் 10 நிமிடங்கள் பூண்டை கொண்டு உங்கள் உள்ளங்காலை மசாஜ் செய்யுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் எளிதில் நோய்வாய்ப்பட மாட்டீர்கள்.

இதையும் படிங்க: Priyanka Chopra : அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா சென்று... ராமரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்: இவை அனைத்தையும் தவிர உள்ளங்காலில் பூண்டை தேய்ப்பதால் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டச் செய்கிறது. மேலும் இதை உள்ளங்காலில் தேய்ப்பதாலும், இரத்தத்தில் வெப்பம் அதிகரித்து உடலுக்கு சூடு தருக்கிறது. எனவே, குளிர் காலங்களிலோ அல்லது பாதத்தில் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பவர்கள் உள்ளங்காலில் பூண்டை தேய்த்தால் உடலுக்கு சூடு கிடைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்: பூண்டில் இருக்கும் பண்புகள் மனம் மற்றும் உடல் அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

உள்ளங்காலில் பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும்?:
உங்களுக்கு தேவையான அளவு பூண்டின் சில பல்லை எடுத்து, அதன் தோலிரித்து, உங்கள் கைகளால் அதை நன்றாக நசுக்கி பிறகு அதை உங்கள் உள்ளம் காலில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு 10 அல்லது 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios