இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது முதல் முறையாக ஓட்டு போடும் இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அவர்களது கடமையை பூர்த்தி செய்ய இன்று  ஆவலாக ஓட்டு போட்டு வருகின்றனர்.

அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் உள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் அதிகாரிகள் வரை பொது மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போடும் காட்சியை பார்க்க முடிந்தது. இதெல்லாம் தவிர்த்து நூறு வயதை கடந்த வயதானவர் முதல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் திருமணம் முடிந்த கையோடு தம்பதிகள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்ட விதம் என பல சம்பவங்கள் நடந்தேறியது.

அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களிக்க வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் காவியா என்ற நிறைமாத கர்ப்பிணி. இன்று அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. வாக்களிக்க வேண்டும் என ஆர்வமாக வளைகாப்பு முடிந்த கையோடு பட்டு சேலையுடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார். இவரை பார்த்த மற்றவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவருடைய போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.