வெளிநாட்டிலிருந்து ஆர்டரை அள்ளும் திருப்பூர் கம்பெனிகள்..! எல்லாத்துக்கும் காரணம் "Prey for Nesamani "..!   

"Prey for Nesamani" என்ற ஹேஸ்டேக், நேற்று இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களது வியாபார யுக்தியை இதன் மூலம் பயன்படுத்தி லாபம் காண தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் பனியன்களில் நேசமணி தொடர்பான புகைப்படம் மற்றும் பிரே பார் நேசமணி என்ற வசனம் அடங்கிய பதிப்பை டி-ஷர்ட்டில் பதிய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த டீ ஷர்ட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளது. எதிர்பார்த்ததைவிட அமோக வரவேற்பை பெற்றதால் பிரே பார் நேசமணி என்ற வசனம் பதியப்பட்ட டீ சர்ட்- கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக திருப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் ஓடோடி டி-ஷர்ட் ஆர்டர்களை எடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த டீ ஷர்ட்டின் விலை ஆடையின் தரத்தைப் பொறுத்து 100 ரூபாய் 500 ரூபாய் வரை வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது