Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் பொங்கல் பானைகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவது பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

pongal pots in tamil nadu
Author
Chennai, First Published Jan 16, 2021, 8:46 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவது பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இயற்கையுடன் ஒன்றி வாழும் தமிழர் மரபில், தங்கள் உழவு தொழிலுக்கு ஆதாரமாக திகழும் சூரியக் கடவுளுக்கும், அதற்கு உறுதுணையாக விளங்கும். கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் பொங்கல் விழாவில், புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதலே மண் பானைகள் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். குறிப்பாக மண் பானைகளுக்கு புகழ்பெற்ற சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் கால்வாய்களில் மண்ணை சேரித்து, பக்குவம் செய்து பல்வேறு அளவிலான மண் பானைகளை உருவாக்கி விற்பனைக்கு உள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள வலையங்குளம் பகுதியில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்ட வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மண் பானைகள், மண் அடுப்பு மற்றும் அகல் விளக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதேபோல், மேலூர் பகுதியை சேர்ந்த மட்பாண்ட தொழிலாளர்கள் அழகர்கோவில் மலை மூலிகைநீர் தேங்கும் கண்மாய் மணலை கொண்டு உருவாக்கியுள்ள மண்பானைகள் வியாபாரிகள், ஆர்வமுடன் விற்றனர்..

கொரோனா ஊரடங்கு காரணமாக கார்த்திகை தீப விளக்கு விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தைப் பொங்கலுக்கு அதிகளவு பொங்கல் பானைகள்விற்பனையாகி வருவதால் தொழில் நலிவடைந்த மட்பாண்ட தொழிலாளர்கள் சிறிது மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். எனினும், அரசு பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கியது போல, மண்பானை மற்றும் அடுப்புகளை வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios