ஆபாச படம் பாக்குறதே தப்புன்னு சொன்னா... இவரு ஆன்லைனில் வீடியோ ஏத்திடுவாராம்! அலேக்கா தூக்கி குமுக்கிய போலீஸ்..!

பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் அலேக்கா தூக்கி துவைத்து எடுத்துள்ளனர். 

கொம்மணாங்குப்பம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் விக்னேஷ். வயது 23 மட்டுமே.. இவர் பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் பல பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக தெரிகிறது. மேலும் இந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

அதன் படி, இவரால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் முன்வந்து விக்னேஷ் மீதான மிரட்டல் குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் விருதாச்சலத்தில் மறைந்திருந்த விக்னேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சமீபத்தில் ஆபாச படம் பார்ப்பதே தவறு என குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றப்பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்து இருந்தார். 

இந்த ஒரு நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல், சமூகத்தின்மீது அக்கறை இல்லாமல் தான்தோன்றித்தனமாக இன்றளவும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்த விக்னேஷ் அதிரடியாக கைது செய்து, அவருக்கே உண்டான பணியில் விசாரணை நடத்தி வருகிறது.