Work From Home | வீட்டில் இருந்து வேலையா? வேண்டவே வேண்டாம்... ப்ளீஸ் ஆபிஸ்க்கு போங்க!
வீட்டிலிருந்தே வேலை பலருக்கும் எளிமையாக தோன்றலாம். ஆனால், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக நிபுரணர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் இருந்தே வேலை செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.
கொரோனா தொற்று காலத்தில் நாடு முழுவதும் முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனோ தொற்று காலம் முடிந்த பின்னர், ஊழியர்களை நிறுவனத்தில் வந்து வேலை செய்யுமாறு அழைக்கிறது. ஆனால், பெரும்பான ஊழியர்கள் பணிக்கு செல்லாமல், வீடிலிருந்தே வேலை செய்ய விரும்புவதாக கூறுகின்றனர். கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள் வேறு வேலை தேடுகிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்வதால் பல இடையூறுகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனிப்பட்ட ஆரோக்கியம்
வீட்டிலிருந்து வேலை செய்வது உடல் செயல்பாடுகளை குறைக்கிறது. மற்றும் உடல் செயலற்ற தன்மையை அதிகரிக்கிறது. இது எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. வீட்டு வேலைகள், குழந்தைகளின் பள்ளி வேலைகள், வீட்டு வேலைகள் போன்ற பொறுப்புகளுடன் வேலை அழுத்ததுடன் மன அழுத்தமும் அதிகரிக்கிறது.
Post office Savings Scheme | அதிக வட்டி விகிதம் தரும் 3 சேமிப்பு திட்டங்கள் இதுதான்!
மனநலம்
சக ஊழியர்களுடனான தொடர்பு குறைவதால், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிப்பதில் உள்ள சிரமம், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கிறது மற்றும் வேலையில் அதிக இடையூறுகள் ஏற்படுகின்றன. அது வாழ்க்கையிலும் தொடர்வதால் குடும்பத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
NPS: ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேமித்தால் போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. பலே திட்டம்!
உற்பத்தித்திறன் பாதிப்பு
வீட்டில் வேலை செய்யும் போது, என்னதான் முயற்சித்தாலும், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார் போன்றவர்களிடமிருந்து அதிக தடைகள் மற்றும் குறுக்கீடுகளுக்கு வழிவகுக்கும். வேலை செய்வதற்கு உகந்ததாக இல்லாத வீட்டுச் சூழல், கவனம் செலுத்துவது மற்றும் ஊக்கமின்மை குறைவதற்கு வழிவகுக்கும். இன்டர்நெட் இணைப்பு பிரச்சனைகள், சாப்ட்வேர் பிரச்சனைகள் போன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் வேலையை கடினமாக்குவதோடு மெதுவாக்குகிறது. சக ஊழியர்களுக்கிடையேயான நேருக்கு நேர் தொடர்புகள் குறைவதால், உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!