plant flowers today

உழவர் தினம் மகளிர் தினம், குழந்தைகள் தினம் என பல தினங்களை நாம் கொண்டாடுகிறோம். இருந்தாலும் பூச்செடி நட்டு வைக்கும் தினம் இன்று என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு முன்னதாக பூச்செடி தினம் என ஒன்று உள்ளதா என கேள்வி எழும் நம் மனதில். ஆனால் உண்டு என்பது தான் உண்மை .

இன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம் என்பதால், தங்களால் முடிந்த அளவிற்கு எவ்வளவு செடி பிடிக்குமோ , எந்தெந்த பூ பிடிக்குமோ அதனை தேர்வு செய்து நட்டு வையுங்கள் . இன்னும் சில நாட்களில் அந்த செடியிலிருந்து மலரும் மலரை பார்த்து, நம் மனம் எப்படி மலரும் என்று நினைத்து பாருங்கள் .

உலக அளவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மலர்கள் உள்ளன. அதில் சில மலர்களை பெண்கள் தலையில் வைத்துக்கொள்வதும்,சில மலர்கள் அழகுக்காக வளர்ப்பதும் , சில மலர்களை மருந்தாக பயன்படுத்துவதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.