யாரும் பாதிக்கக்கூடாது..! கொசுவை ஒழிக்க ஒரு மாற்றுத்திறனாளியின் சமூக சேவையை பாருங்களேன்...! 

டெங்கு கொசுவை ஒழிக்கும் பொருட்டு வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஒருவர் புதுவையில் வீதிவீதியாக சென்று மருந்து தெளிக்கும் வேலையை பாராட்டி அனைவரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதுவையில் உள்ள சாரம் என்ற பகுதியில் பைண்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார் மாற்றுத்திறனாளியான ஜோசப். இவர் அனைவருக்கும் உதவி செய்வதில் மிகுந்த நல் உள்ளம் கொண்டவர். அவருக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதில் மும்முரமாக செயல்படுவார்.ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதங்களில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். 

இந்த ஒரு நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர் வசிக்கும் அந்தப்பகுதியில் கொசுவை ஒழிக்க மருந்து தெளிப்பான் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் வீதி வீதியாக சென்று அசுத்தமாக உள்ள இடங்களில் கொசு மருந்து அடித்து வருகிறார் இவருடைய இந்த பொதுநலன் கருதி செயல்படும் சேவையை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர்