Asianet News TamilAsianet News Tamil

“ பீரியட்ஸ் ”  நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன?.... ஆண்களின் கவனத்துக்கு …..!!!

periods time-attention-boys-girls-attitude-change
Author
First Published Oct 21, 2016, 2:08 AM IST


பீரியட்ஸ் ”  நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன?.... ஆண்களின் கவனத்துக்கு …..!!!

உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா? அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் தான் இதற்குக் காரணம். என்ன மாற்றங்கள் என்று நூறு சதவீதம் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் ஆதரவாய் இருப்பது உங்கள் கடமை.

அதிக அன்பை செலுத்துங்கள்:

அந்த நாட்களில் பெண்கள் சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிமிக்கவராக ஆவது இயல்பு. உங்களால் முடிந்தவரை அவர்களிம் அன்பாய் இருக்க முயற்சி செய்யுங்கள். அவ்வபோது, 'I love you', 'You are cute' போன்ற காதலை வெளிப்படுத்தும் வார்த்தைகளை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களின் வேலை சார்ந்த விஷயங்களில் ஊக்கப்படுத்துங்கள். இவை, அவர்களின் மூடை மாற்றி சந்தோஷமாய் உணரச் செய்யும்.

சிறு விஷயங்களில் ஆச்சரியப்படுத்துங்கள்:

காலை எழுந்தவுடன் மலர்கள் அல்லது சாக்லேட் கொடுத்து குட் மார்னிங் சொல்வதும், அவர்கள் செல்லும் இடத்திற்கோ, அலுவலத்திற்கோ சிறு பரிசுகள் அனுப்புவதும் பெண்களின் மூட் ஸ்விங்கை உடனே மாற்றி உற்சாகமான மனநிலைக்கு கொண்டு செல்ல உதவும். நேரம் கிடைக்கும். போது அவர்களின் உடல் சோர்வும், மாதவிடாய் வலியும் குறைய உதவுங்கள் மனைவிக்கு / காதலிக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து அசத்துங்கள். உடன் அமர்ந்து அவர்கள் ரசிக்கும் படத்தை பாருங்கள். பயணம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கோ, பிடித்த சினிமாவிற்கோ அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் ரசனையைப் புரிந்து திட்டமிடுங்கள். வேலையில் அவர்கள் அதிக கவனம் செலுத்த இதுபோன்ற ஆச்சரியங்கள் ஓர் எனர்ஜி பூஸ்டாக இருக்கும்.

 

வீட்டு வேலைகளில் உதவுங்கள்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பொதுவாகவே சோர்வுடன் இருப்பார்கள். அலுவலகத்தில் அந்த சோர்வைத் தாண்டியும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டு வேலைகளையும் அவர்களே பார்க்க வேண்டும் என்பது இல்லை. முடிந்த வரை, வீட்டில் உள்ள வேலைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களின் பெரும் பாரத்தை, நீங்கள் குறைத்ததாக உணர்வர்கள்.

வேண்டாமே!

மாதவிடாய் காலத்தில் உடல் உறவு கொள்ள உங்கள் மனைவியை வற்புறுத்தாதீர்கள். ஏற்கனவே அவர்கள் சோர்வுடன் இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வலியில் இருக்கும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து, அவர்களைப் புரிந்து நடப்பது அவசியம்.

மாதவிடாய் சுழற்சியை நினைவில் கொள்ளுங்கள்

உங்களால் மேலே சொன்ன எந்த விஷயத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அவர்களின் மாதவிடாய் சுழற்சியை குறித்து வையுங்கள். இது 28 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒன்று. இதில் 21-28 நாட்களில், உடல் ரீதியான மாற்றங்கள் நடக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு தலைவலி, முதுகுதண்டு வலி, அடி வயிறு வலி போன்றவை ஏற்படும். ஒரு வாரத்திற்கு முடிந்த வரை அமைதியாய் இருக்க முயற்சியுங்கள்.

பெண்ணின் இடத்தில் இருந்து அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் படும் அவஸ்த்தையை உங்களால் உணர முடியாவிட்டாலும் கூட, அவர்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஓவ்வொரு மாதமும் ஏற்படும், அது அவர்களுக்கு வலியை கொடுக்கும் என்று புரிந்து கொண்டாலே போதுமானது. நீங்கள் கொடுக்கும் அன்பு அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையானதாக இருக்கக் கூடும் என்பதை  மனதில்  வைத்து கொள்ளுங்கள்.......!!!

  

 

Follow Us:
Download App:
  • android
  • ios