நித்தியானந்தாவின் எதார்த்தமான பேச்சால் மயங்கும் இளைஞர்கள்...! எவ்வளவு அடித்தாலும் துணிந்தெழும் நம்பிக்கை பிறக்குதாம்....!

நல்லது செய்தாலும் விமர்சனம் செய்வார்கள் கெடுதல் செய்தாலும் விமர்சனம் எழும். இதனை யாராவது மறுப்பார்களா? அல்லவா அந்த வகையில், இந்த ஒரு விஷயம் நித்யானந்தா விஷயத்தில் பொருத்தி பார்க்கலாம். தற்போது பல்வேறு வழக்குகளில் நித்தியானந்தாவை தேடி வருகிறது காவல் துறையினர்.

இந்து ஒரு நிலையில் அவர் எங்கிருந்து எப்படி, இப்படி எல்லாம் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார் என பெரும் தேடுதலில் இறங்கியுள்ளது சீடர்கள் மட்டுமல்ல... போலீசாரும் கூட. இதற்கிடையில் நித்யானந்தாவை கண்டுபிடிப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த போது, "நித்தியானந்தாவை கண்டுப்பிடிப்பதில் சிரமம் உள்ளது" என தெரிவித்து இருந்தனர். 

இப்படி ஒரு நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய சீடர்களுக்கு எழுச்சி உரைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் நித்யானந்தா. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் "தன்னை எதிர்ப்பவர்கள் ஒரு முட்டாள்" என்றும், எதிர்ப்பது ஒரு பொருட்டே இல்லை. தன்னை தாக்குவது ஒரு விஷயமே இல்லை. ஆனால் எவ்வளவு தாக்கினாலும் நிலையாக இருப்பது தான் மிக முக்கியமான ஒன்று. அது நான்தான் என பெருமையாக பேசி பெருமை கொள்கிறார் நித்தினந்தா

இதையெல்லாம் மீறி அடுத்தகட்டமாக தொடர்ந்து பேசிய நித்யானந்தா, கைலாச என்பது எல்லை இல்லாத ஓர் "ஆன்மீக பெருவெளி" என்றும் அங்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் தன்னுடைய செல்லப் பிராணிகளையும் அழைத்து வர அனுமதி உண்டு, அவற்றுக்கும் பலவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன என ஒரு ட்விஸ்ட் வைத்தும் பேசியிருக்கிறார் நித்யானந்தா.

இதில் ஒரு விஷயத்தை உற்று நோக்கினால், சமீபத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் ஐபி எண்ணை வைத்து அவர்களை கண்டுபிடித்து வீட்டிற்கு சம்மன் அனுப்பப்படும் என காவல் துறை தெரிவித்திருந்த நிலையில், இன்னொரு பக்கம் நித்யானந்தா ஆற்றும் எழுச்சி உரையை தைரியமாக ஃபேஸ்புக் மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் டெலிகாஸ்ட் செய்து வருகிறார். அவரை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய விஷயமா என்ன ? என அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் அப்படி என்ன செய்து விட்டார் நித்யானந்தா? கொலை செய்து விட்டாரா? வேறு ஏதாவது பெரும் சிக்கலை மற்றவர்களுக்கு ஏற்படுத்திவிட்டாரா? அனைவரிடத்திலும் பணத்தைப் பெற்று விட்டு ஏமாற்றிவிட்டாரா?  வேறு என்னதான் செய்துவிட்டார்? அவரை ஏன் இப்படி துரத்த வேண்டும் என ஆதரவு குரல் கொடுப்பவர்கள் தான் ஏராளமாக இருக்கின்றனர்.

இதில் சீடர்களையும் தாண்டி இன்றைய இளைஞர்களையும் அவருடைய ஈர்ப்பு பேச்சால் தன் பக்கம் இழுத்து வருகிறார் என இன்னொரு பக்கம் கருத்தும் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் எவ்வளவு அடித்தாலும் மேன்மேலும் உயர்ந்து வா என்பது போல தன்னுடைய எழுச்சி உரையை பரப்பி வருவதை பார்த்து நித்தியானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர் என்றே சொல்லலாம். 

இதை தவிர்த்து அவர் பேசிய ஒரு குறிப்பிட்ட வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதரவு பதிவுகளை தெரிவித்து, மேன்மேலும் மக்கள் மத்தியில் அவருடைய புகழை விரிவடையச் செய்கின்றனர் என்பதே உண்மையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனையெல்லாம் எங்கேயோ இருக்கும் நித்யானந்தா கூர்ந்து கவனித்து விட்டு அதனையும் தன்னுடைய உரையில் பேசி, தனக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது என பெருமை பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.