எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் வாழும் மக்கள் ...!!! அதிர்ச்சி தகவல் ...!!!

எய்ட்ஸ் நோய் எந்த அளவுக்கு கொடிய நோய் என அனைவருக்கும் தெரியும். ஆனால், உலக அளவில் மேற்கொண்ட ஆய்வில், கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டு, அவர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து வருவதாக , உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால் எய்ட்ஸ் நோய்க்கு மட்டும் இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நோய் உள்ளவர்கள் சரியான சிகிச்சை கூட பெறுவதில்லை. மேலும் தெரிந்துகொள்ளவும் முன்வருவதில்லை. இதனால், காரணம் தெரியாமலேயே மரணத்தை தழுவுகின்றனர்.

இன்னும் சொல்ல போனால், வீட்டில் இருந்தபடியே எய்ட்ஸ் இருப்பதை கண்டு பிடிக்க , எளிய பரிசோதனைகளும், அதற்குண்டான விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம்(who ) தெரிவித்துள்ளது.

இந்த கருத்தை , நாளை எய்ட்ஸ் தினம் (dec 1 ) என்பதால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.....