people feels very guilt to say their village name
ஊர் பெயர் சொல்ல தயங்கும் மக்கள்..! அப்படி என்ன பெயர் தெரியுமா..?
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தான் பன்னிமடை ஊராட்சி....
இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊர் பெயரை சொல்லவே அதயக்கம் காட்டுகிறார்கள்.
குறிப்பாக மாணவர்கள், பேருந்தில் பயணிக்கும் போதும் சரி உடன் வேலை செய்யும் நபர்களும் சரி இந்த ஊர் பெயர் கேட்ட உடன் சிரிக்கின்றனராம்.
அதனால், அருகில் உள்ள ஊர் பெயரை சொல்லி வருகின்றனராம்.
பன்னீர் மடை
பன்னீர் மடை என்ற தங்களது ஊர் பன்னிமடை என மாறியதாக கூறுகின்றனர், கிராம மக்கள். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊரை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ஊற்றுகளில் பெருக்கெடுக்கும் நீர் இப்பகுதியில் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும் எனவும், அதை பருகும் போது பன்னீர் போன்ற சுவை தருமென்பதால் பன்னீர்மடை என அழைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் இன்று பன்னிமடை என அழைக்கப் படுவதால், இந்த பெயரை சொல்லவே சங்கடப்படும் மக்கள், கடந்த 15 ஆண்டுகளாக ஊர் பெயரை மாற்றக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகவும், பலமுறை கிராம சபா கூட்டங்களில் பெயர் மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதுவரை தீமானம்..தீர்மானமாகவே இருப்பதாகவும், எந்த நடவடிக்கையும் இது குறித்து அரசு மேற்கொள்ளவில்லை என அந்த கிராம மக்கள் வருத்தமாக தெரிவிக்கின்றனர்.
